எலும்பு முறிவு ஏற்பட்ட காலுடன் நடைப்பயணமாக சொந்த ஊருக்குத் திரும்பும் இளைஞர்

உடைந்த கால்களுடன் 240 கி.மீ நடைப்பயணம் – ஊரடங்கு உத்தரவால் கலங்கும் ராஜஸ்தான் இளைஞர்

சொந்த ஊருக்கு நடைப்பயணமாகப் புறப்பட்ட இளைஞர் ஒருவர் கால்களில் கட்டப்பட்டிருந்த மாவுக்கட்டுகளை சரிசெய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

இந்தியாவில் கொரோனா அச்சம் ஒருபுறம் இருக்க.. ஊரடங்கு உத்தரவு.. பசி… உறைவிடப் பிரச்னை எனப் பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. மத்தியப்பிரதேச சாலையில் எலும்பு முறிவு ஏற்பட்ட காலுடன் நடைப்பயணமாக சொந்த ஊருக்குத் திரும்பும் இளைஞர் ஒருவர் கால்களில் கட்டப்பட்டிருந்த மாவுக்கட்டினை சரிசெய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காண்போரின் மனதை உருக்குவதாக அந்த வீடியோ அமைந்துள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வர்லால் என்ற அந்த இளைஞர் மத்தியப்பிரதேச மாநிலம் பிபாரியா நகரில் தினக்கூலியாகப் பணியாற்றி வந்துள்ளார். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட சிறிய விபத்து ஒன்றில் அவரது மூன்று விரல்கள் மற்றும் கணுக்காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

Advertisements