பேரம் பேசி, பேசி தேமுதிக நிர்வாகிகள் களைத்து போய்விட்டனர்

பேரம் பேசி, பேசி தேமுதிக நிர்வாகிகள் களைத்து போய்விட்டனர் என்றே சொல்லலாம்.

அதிமுக, பாஜக கூட்டணி என்றால் கட்சியே கலகலத்து போய்விடும் என்பதை ஆரம்பத்தில் உணராத சுதீஷ், பிரேமலதா இப்போது அடுத்து என்ன செய்வது என கையை பிசையும் தள்ளப்பட்டு உள்ளனர்.

Advertisements

திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டது என ஸ்டாலின் நேற்று அறிவிக்கும் வரை தேமுதிகவுக்கு இருந்த டிமாண்ட் சட்டென்று சரிந்தது. அதுவரை கொஞ்சி கொண்டிருந்த அதிமுக இது தான், இவ்வளவு தான் என அதிரடி காட்ட திணறி போனது தேமுதிக,

தொடர்ந்து முயற்சித்தால் திமுக பரிசீலிக்கும் என துரைமுருகன் தற்போது தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது “ஒரு தெளிவான நிலைப்பாடு எடுங்கள், இரண்டு பக்கமும் பேசி கொண்டிருந்தால் உங்களை நம்பி பேச யாரும் முன் வரமாட்டார்கள் என உறுதிப்பட கூறி விட்டேன்” என்றார்.

பேரம், பேரம் என அலைந்ததன் விளைவு கூட்டணிக்காக தெருவில் அலைகிறார்கள் தேமுதிக நிர்வாகிகள்!

Advertisements

Related posts