சீனாவை திருப்திபடுத்த உலக சுகாதார அமைப்பு கொரோனா குறித்த உண்மையை மறைக்கிறது! தைவான் வெளியிட்ட E-Mail ஆதாரம்

சீனாவை திருப்திபடுத்த உலக சுகாதார அமைப்பு, கொரோனா குறித்த உண்மையை மறைப்பதாக தைவான் ஆதாரம் வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் குறித்த தீவிர தன்மையை கண்டுகொள்ளாமல் இருந்ததாக தைவான் குற்றம்சாட்டியுள்ளது. அந்த அமைப்பு சீனாவின், ஆதரவாக விரிவான தகவல்களை வெளியிடாமல் மறைப்பதாகவும் கூறியுள்ளது தைவான்.

Advertisements

ஊடகங்களிடம் தைவான் நாட்டு அதிகாரி கூறுகையில், இது குறித்து உலக சுகாதார அமைப்பிடம் விரிவான தகவலை இமெயில் வழியாக கேட்டதாகவும், அதில், கொரோனா SARS வகை வைரஸ் அல்ல என்றும், அதற்கான பரிசோதனை நடைபெற்ற வருகிறது என்றும்.

ஆனால், நோயாளிகளை சீனா தனிமைப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டு கடந்த டிசம்பர் 31ஆம் திகதி WHO பதிலளித்தாக தெரிவித்துள்ளது.

தைவான் நாடு சீனா கடற்கரையில் இருந்து 80 மைல் தொலைவில் உள்ளது. அந்நாடு கடந்த 70 வருடங்களாக தனியாக ஆட்சிபுரிந்து வருகிறது. ஆனால், சீனா அந்நாட்டை பெய்ஜிங் உடன் இணைக்க பல முறை முயற்சி செய்தது.

அது இயலாமல் போனதால், தைவானை உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக்க சீனா அழுத்தம் கொடுத்தது.

Advertisements

ஒரு மனிதனில் இருந்து மற்றொரு மனிதனுக்கு பரவும் வைஸ் என்று தைவான் மத்திய நோய்தடுப்பு பிரிவு தெரிவித்ததாக கூறியதை முதலில் உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது. இதற்கு, தைவான் ஒரு மனிதனில் இருந்து மற்றொரு மனிதனுக்கு நோய் பரவுவதை SARS வைரஸ் மூலம் உறுதி செய்யலாம் என்று பதிலளித்துள்ளது.

எனினும், அந்த நேரத்தில் தைவானில் கொரோனா பரவவில்லை என்பதால், எங்களால், WHOக்கு உறுதிபடுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.

WHO தைவானின் எச்சரிக்கைகளை முற்றிலும் புறக்கணித்து, “வேண்டும் என்றே அந்நாடு சீனா மீது குறை கூறுவதாக“ தெரிவித்துள்ளது.

எனவே, உலக சுகாதார அமைப்பு, சீனா மீது நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய தவறிவிட்டதாக தைவான் குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், தைவானுக்கும் உலக சுகாதார அமைப்பிற்குமான மோதலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் WHOக்கான நிதியுதவியை நிறுத்த திட்டமிட்டுள்ளார்.

WHOன் செயல்பாடுகளை ஆராய வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக WHOன் தலைவர், Tedros Adhanom Ghebreyesus கொரோனா தொற்றை அமெரிக்க அரசியல் ஆக்குகிறது. இவ்வாறு தொடர்ந்தால், பிணங்களை பைகளில் அதிகம் சேகரிக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருத்து குறிப்பிடத்தக்கது.

Advertisements

Related posts