கொரோனா வைரஸால் உயிரிழந்த உலக பிரபலங்கள்

ஜப்பான் நாட்டின் மிகச் சிறந்த காமெடி நடிகரான கென் ஷிமூரா உள்ளிட்ட பல துறை பிரமுகர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.

கண்ணுக்குத் தெரியாத கொடிய வைரஸ் கிருமியால் கொரோனா 185 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை உலக அளவில் 1,80,000 த்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 26 லட்சம் பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்களில், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரும் அடங்குவர்.

Advertisements

நைஜீரியா நாட்டின் அதிபருக்கு ஆலோசகராக இருந்த அப்பா கியாரி கடந்த 17ந்தேதி பலியானார்.

துருக்கி நாட்டின் சுதந்திர துருக்கி கட்சி தலைவரான ஹைதர் பாஸ் (வயது 73) கடந்த 14ந்தேதி பலியானார்.

கடந்த மார்ச் 25ந்தேதி புடாபெஸ்ட் நாட்டுக்கான இங்கிலாந்து தூதரகத்தின் துணை தலைவர் ஸ்டீவன் டிக் பலியானார்.

அமெரிக்காவின் டாப் செப் மாஸ்டர்ஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 வின்னரான பிளாய்ட் கார்டோஜ் கடந்த மார்ச் 25ந்தேதி பலியானார்.

Advertisements

ஆப்ரோ-ஜாஸ் இசை பிரபலம் மனு திபாங்கோ (வயது 86) கடந்த மார்ச் 24ந்தேதி பலியானார்.

ஸ்பெயின் நாட்டின் சான்டேன்டர் என்ற பெரிய வங்கியின் போர்ச்சுகல் பிரிவு தலைவராக இருந்த ஆன்டனியோ வியர்ரா மோன்டீரோ (வயது 73) கடந்த மார்ச் 18ந்தேதி பலியானார்.

ஜப்பான் நாட்டின் மிகச் சிறந்த காமெடி நடிகரான கென் ஷிமூரா கடந்த மார்ச் 30ந்தேதி பலியானார்.

இங்கிலாந்து நாட்டின் லங்காஷைர் கிரிக்கெட் கிளப் தலைவர் டேவிட் ஹாட்ஜ்கிஸ் கடந்த மார்ச் 30ந்தேதி பலியானார்.

ஐ லவ் ராக் அண்டு ரோல் பாடலாசிரியர் ஆலன் மெர்ரில் கடந்த மார்ச் 29ந்தேதி பலியானார்.

நாஜி படைகளிடம் இருந்து பாரீஸ் நகரை விடுவித்த முதல் ஸ்பானிஷ் படை பிரிவின் கடைசி நபராக உயிர் வாழ்ந்த ரபேல் கோம்ஸ் நியோட்டோ கடந்த மார்ச் 31ந்தேதி பலியானார்.

சோமாலியாவின் முன்னாள் பிரதமர் நூர் ஹசன் மற்றும் செர்பியா நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர் பிளேசிக் ஆகியோர் கடந்த 1ந்தேதியும், காமெடி நடிகர் எட்டீ லார்ஜ் (வயது 78) கடந்த 2ந்தேதியும் பலியாகினர்.

Advertisements