கொரோனா சோதனை கருவிகள் நேற்றிரவே வராதது ஏன்?

கொரோனா சோதனை கருவிகள் நேற்றிரவே வராதது ஏன்?

ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்று கண்டுபிடிக்கும் விரைவு சோதனை கருவிகள் ஒரு லட்சம் எண்ணிக்கையில் வந்துகொண்டிருப்பதாக ஒரு வார காலமாக தமிழக அரசு சொல்லிவந்தபோதும், இன்றுவரை அது வந்து சேரவில்லை.

Advertisements

விரைவு சோதனை கருவிகளை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தி லட்சக்கணக்கான சோதனைகள் செய்தால் மட்டுமே கொரோனா தோற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று நிபுணர்களும், மருத்துவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

சீனாவிலிருந்து முதல் கட்டமாக 50,000 “ரேப்பிட் டெஸ்ட் கிட்” நேற்றே வந்துவிடும் என்று முதல்வர் தரப்பில் கூறப்பட்டது. கொரோனா விரைவு சோதனை கருவிகள் வியாழக்கிழமை நேற்றிரவே வந்து, இன்று சோதனை தொடங்கும் என்று சுகாதாரத்துறை செயலாளரும் நேற்றே கூறியிருந்தார்.


ஆனால் விரைவு சோதனை கருவிகள் இன்னமும் வந்து சேரவில்லை. அவை வந்துசேர இன்னமும் ஓரிரு நாட்கள் தாமதம் ஆகும் என்று தெரிகிறது.

“விரைவு சோதனை கருவிகள் ஓரிரு நாட்களில் வந்துசேருமென நம்புகிறோம். மத்திய அரசு மூலம் 50 ஆயிரம் “கிட்” கிடைக்க வாய்ப்புள்ளது” என்று தமிழக தலைமைச் செயலர் இன்று செய்தியாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார்.

Advertisements

“நாம் ஏற்கெனவே நேரடியாக சீனாவில் ஆர்டர் செய்துவிட்டோம். மத்திய அரசும் ஆர்டர் செய்திருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மத்திய அரசுக்கு முன்னுரிமை தரப்பட்டு, அவர்கள் மூலமாக நமக்கு வர வாய்ப்புள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

எனவே தாமதத்துக்கு காரணம் மத்திய அரசின் தலையீடுதான் என்றும், நிவாரண நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டியதுபோல் விரைவு சோதனை கருவிகள் வழங்குவதிலும் பாரபட்சம் காட்டக் கூடாது என்றும் இப்போதே சர்ச்சைகள் உருவாகியுள்ளன.

“விரைவான சோதனை கருவிகள் ஆன்டிபாடிகளை சோதிக்கும், இதன் மூலம் 30 நிமிடங்களுக்குள் முடிவுகளை நாம் அறிவோம். இந்தியாவில் ஒரு நிபுணர் குழு இதை பரிந்துரைத்துள்ளது

Advertisements

Related posts