சிம்பு, பிரபுதேவாவை பிரிந்து வந்தது ஏன்? வெளிப்படையாக பேசிய நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.

முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடிப்பது மட்டும் இல்லாமல், தனி ஒரு நாயகியாக பல்வேறு வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ளார் நயன்தாரா. கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தில் நடித்த இவர் அடுத்தடுத்து பல்வேறு படங்களில் பிசியாக உள்ளார்.

Advertisements

இன்று சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா தனது சினிமா பயணத்தில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தவர். சிம்பு, பிரபுதேவாவுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்தித்தவர். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்துவருகிறார் நயன்தாரா.

தனது பழைய காதல்கள் குறித்து இதுவரை அமைதிகாத்த நயன்தாரா, தற்போது பிரபல ஊடகம் ஒன்றுக்கு கொடுத்துள்ள பேட்டியில், பழைய காதலர்களை பிரிந்தது ஏன் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

“நம்பிக்கை இல்லாத இடத்தில் காதல் இருக்காது. அங்கிருந்து காதல்வெளியேறிவிடும். நம்பிக்கை இல்லாத ஒருவருடன் வாழ்வதை விட, தனியாக வாழ்வதே சிறந்தது என்று முடிவு எடுத்தேன்” என்று முந்தைய காதல் முறிவுகள் குறித்து நயன்தாரா கூறியுள்ளார்.

Advertisements

Related posts