எச்சரிக்கை மக்களே.. தமிழ்நாட்டில் இன்று ஊரடங்கு தளர்வு கிடையாது – தமிழக அரசு திட்டவட்டம்

நாடு முழுவதும் இன்று முதல் ஊரடங்கு சற்றே தளர்த்தப்படும் நிலையில், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த 14-ந் தேதியுடன் முடிவடைவதாக இருந்த இந்த ஊரடங்கு மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Advertisements


இந்த நிலையில் மக்கள் சந்திக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு, இன்று முதல் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, தச்சு தொழிலாளர், பிளம்பர், எலெக்ட்ரீசியன், மோட்டார் பழுதுபார்ப்போர், கம்ப்யூட்டர் பழுது பார்ப்போர், ஐ.டி. துறையில் பாதிபேர் இன்று முதல் தங்கள் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசு அறிவித்தபடி, தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் இன்று தங்களுடைய பணிகளை தொடங்கலாம் என்று ஆவலோடு காத்து இருந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு நேற்று ஒரு விளக்கம் அளித்து இருக்கிறது. அதில், ஊரடங்கு குறித்து அரசின் அடுத்த உத்தரவு வரும் வரை, தமிழகத்தில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Chennai: Labourer and customers seen at a vegetables market during nationwide lockdown imposed to contain the spread of the COVID-19, in Chennai, Monday, April 6, 2020. (PTI Photo/R Senthil Kumar) (PTI06-04-2020_000119A)

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

“மத்திய அரசு கடந்த 15-ந் தேதி வெளியிட்ட ஆணையின்படி ஏப்ரல் 20-ந் தேதிக்கு பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்கவேண்டும் என தெரிவித்து இருந்தது. இதற்கென மாநில அரசு ஒரு நிபுணர் குழுவை நியமித்து உள்ளது.

Advertisements

இந்த குழு தன் முதல் கட்ட கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதல் கட்ட ஆலோசனைகளை முதல்-அமைச்சரிடம் 20-ந் தேதி (இன்று) தெரிவிக்க உள்ளது. இந்த குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து முதல்- அமைச்சர் முடிவெடுக்க உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு ஆணைகள் வெளியிடும் வரை தற்போது உள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisements