வீடு வீடாக சென்று உணவு வழங்கும் ஹரியும், மேகனும், வைரல் வீடியோ காட்சிகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், லாப நோக்கில் இயங்காத தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் ஒரு தம்பதி வீடு வீடாகச் சென்று உணவுப் பொட்டலங்களை வழங்கியது.

பலரும் அந்த ஜோடி யார் என்று தெரியாமலே உணவுப்பொட்டலங்களை வாங்கிக் கொண்டு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

Advertisements

சிலர் மட்டும் முதலில் அந்த ஜோடியை அடையாளம் தெரிந்துகொள்ளாவிட்டாலும் சற்று தாமதமாக அவர்கள் யார் என்பது தெரியவர, ஆச்சரியத்தில் மூழ்கினர்.

அந்த ஜோடி, ஹரியும், அவரது மனைவி மேகனும்… Angel Food என்னும் தொண்டு நிறுவனத்தின் சார்பில், ஹரியும் அவரது மனைவியும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வீடு வீடாகச் சென்று உணவுப்பொருட்களை வழங்கினர்.

Sierra Bonita பகுதியில் உள்ள கண்காணிப்புக் கமெராக்களில் ஹரியும் மேகனும் உணவு வழங்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

கேசுவலாக ஜீன்ஸ் அணிந்த இருவரும் முகக்கவசங்களை அணிந்துகொண்டு வீடு வீடாகச் சென்று உணவுப்பொட்டலங்களை வழங்குவதை கமெராவில் சிக்கிய காட்சிகளில் காண முடிகிறது.

அமெரிக்காவில் கொரோனா பயங்கரமாக பரவிவரும் நிலையில், அதிக அபாயத்திலிருக்கும் மோசமாக நோயுற்றிருக்கும் மக்களுடைய வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு உணவு வழங்கியுள்ளார்கள் இங்கிலாந்து இளவரசர் ஹரியும் மேகனும்.

Advertisements
வீடு வீடாக சென்று உணவு வழங்கும் ஹரியும், மேகனும், வைரல் வீடியோ காட்சிகள்

வீடு வீடாக சென்று உணவு வழங்கும் ஹரியும், மேகனும், வைரல் வீடியோ காட்சிகள்

Posted by Today Main News on Saturday, April 18, 2020

அப்போது, எங்களை ஹரி, மேகன் என்று மட்டும் அழைத்தால் போது என்று கூறி மக்களை வியப்பிலாழ்த்தினார்கள் இருவரும். மக்களோடு மக்களாக இணைந்து மக்களுக்கு உதவியது தன்னை மகிழ வைத்ததாக தெரிவித்துள்ளார் மேகன்.

Advertisements