விஜய் மகன் ஹீரோவாக நடிக்கிறார் – விஜய் சேதுபதி தயாரிப்பாளர்

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கில் புச்சி பாபு சனா இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ரங்கஸ்தலம் பட இயக்குநர் சுகுமார் இணைந்து தயாரித்துள்ள உப்பெனா படத்தில் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் வ்வைஷ்ணவ் தேஜ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ராயாணம் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

Advertisements


இந்தப் படத்தின் கதை குறித்து நடிகர் விஜய்யிடம், விஜய்சேதுபதி மாஸ்டர் படப்பிடிப்பின் போது விவாதித்துள்ளார். அப்போது தனது மகன் ஜேசன் சஞ்சய்க்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்கும் என்று விஜய் முடிவெடுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து தெலுங்கில் விரைவில் திரைக்கு வர உள்ள உப்பெனா படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தமிழில் இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதி தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கில் உப்பெனா படத்தை இயக்கிய புச்சி பாபு தமிழிலும் ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தையும் இயக்க உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படித்து வரும் ஜேசன் சஞ்சய் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருப்பதும் குறிப்பிடத்தகக்து.

Advertisements

Related posts