ஊரடங்கு உத்தரவால் விஜயகாந்தின் மகன் செய்த காரியம்

ஊரடங்கு உத்தரவால் சலூன் கடைகள் மூடியிருப்பதால் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் செய்த காரியம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் அப்பா வழியில் நடிகர் ஆனார்.

கடந்த 2018ம் ஆண்டு வெளியான சகாப்தம் படம் மூலம் சண்முக பாண்டியன் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் மதுரை வீரன் படத்தில் நடித்தார். தற்போது அவர் மித்ரன் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Advertisements

மேலும் ஊரடங்கு உத்தரவால் சண்முக பாண்டியன் வீட்டில் முடங்கியுள்ளார். தாடியும், மீசையுமாகவிருந்த சண்முக பாண்டியன் அதை ஷேவ் செய்ய முடிவு செய்தார். சலூன் கடைகள் எதுவும் திறக்காததால் தாடி, மீசையை தானே ஷேவ் செய்யதார் சண்முக பாண்டியன்.

சும்மா தானே இருக்கிறோம் என்று தாடி, மீசையை டிசைன், டிசைனாக கட் செய்து அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இறுதியாக தாடி, மீசை இல்லாமல் கிளீன் ஷேவ் லுக்கையும் வெளியிட்டுள்ளார்.அதில் அவர் சார்லி சாப்ளின் போன்று மீசை வைத்திருந்த புகைப்படமும், மதுரைக்காரங்க போன்று மீசை வைத்திருந்த புகைப்படமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

மேலும் அடேய்களா, சலூன் கடையை மட்டுமாவது திறந்து விடுங்கள். நாங்கள் எல்லாம் முடி வெட்ட முடியாமல் அந்நியன் போன்று ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று பலரும் தெரிவித்துள்ளனர்கள். சில நடிகைகள் தங்கள் அப்பாவுக்கு முடி வெட்டிவிட்டதும், இயக்குநர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முடி வெட்டிவிட்டது எல்லாம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements