கீர்த்தி சுரேஷின் பெண்குயின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் பெண்குயின். இப்படம் வரும் 19-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆதி தேவ், லிங்கா ஆகியோர் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் உருவாகி உள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. கதாநாயகியை மையமாக கொண்ட இப்படத்தின் ட்ரெய்லரை 3 முன்னணி நடிகர்கள் வெளியிட்டனர். அதன்படி தமிழில் தனுஷும், தெலுங்கில் நானியும், மலையாளத்தில் மோகன் லாலும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த ட்ரெய்லரை வெளியிட்டனர்.

Advertisements

காட்டிற்குள் தொலைந்து போன மகனை தேடும் தாயின் போராட்டம் பற்றியது என்பது இந்த ட்ரெய்லரின் மூலம் தெரிய வருகிறது. சைக்கோ கொலைகாரனிடம் இருந்து தனது மகனை மீட்கும் தாயாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சைக்கோ திரில்லராக உருவாகி உள்ள படத்தின் ட்ரெய்லர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இதனிடையே இந்த ட்ரெய்லரை டிவிட்டர் வெளியிட்ட தனுஷ் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில் “ ஒரு தாயின் அசாதாரண பயணம் தொடக்கம். இந்த ட்ரெய்லரை வெளியிடுவதில் மகிழ்ச்சி” என்று குறிபிட்டுள்ளார்.

Advertisements