அதிர்ச்சி : வாகன பறிமுதலை கண்டித்து, நடுரோட்டில் தீக்குளித்த இளைஞர் பலி

கேரள மாநிலம் மூணாறு அருகே காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால், இளைஞர் ஒருவர் சாலையிலேயே தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அடுத்துள்ள சூரியநெல்லி பகுதியில் விஜி என்பவருடைய மகன் விஜய பிரகாஷ் (24) 2 சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சாந்தம்பாறை காவல்துறையினர் எச்சரித்துள்ளர்.

Advertisements


இதை பொருட்படுத்தாத விஜய பிரகாஷ் மீண்டும் சுற்றிதிரிய காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனால் மனமுடைந்த விஜய பிரகாஷ் டீசலை தன் மீது ஊற்றிக் கொண்டு என் பைக்கை தராவிட்டால் காவல்துறையினரையும் கொழுத்தி தானும் கொழுத்தி கொள்வேன் என கூறிக்கொண்டு அப்பகுதியில் ஆர்பாட்டம் செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் திடீரென தன்னை தானே கொளுத்தி கொண்டு சூரியநெல்லி டவுன் பகுதியில் நடு ரோட்டில் நடந்து வந்தார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றியும் துணிகளை கொண்டும் தீயை அணைத்தனர். அதற்குள் அவரது உடலில் தீ காயங்கள் ஏற்படவே அவர் மயங்கி விடவே அவரை கோட்டயம் மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சாந்தம் பாறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisements