செருப்பால் தாக்கிக் கொண்ட பா.ஜ.க எம்.பி – எம்.எல்.ஏ

கல்வெட்டில் என் பெயர் ஏன் இல்லை!’ – செருப்பால் தாக்கிக் கொண்ட பா.ஜ.க எம்.பி – எம்.எல்.ஏ

உத்திர பிரதேசம் சான்ட் கபீர் நகரில் மாவட்டத்தின் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திட்டங்கள் குறித்தும், மேலும் அப்பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் அந்தத்தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் சராத் திரிபாதி கலந்துகொண்டார்.

Advertisements

இதே கூட்டத்தில் பா.ஜ.கவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ராகேஷ் பகேலும் பங்கேற்றிருந்தார். அந்தத்தொகுதியில் நடந்த சாலை அடிக்கல் நாட்டுவிழா கல்வெட்டில் தன் பெயர் ஏன் இடம்பெறவில்லை எனக் கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து விவாதம் முற்றிய நிலையில் ஆவேசமடைந்த எம்.எல்.ஏ ராகேஷ் செருப்பைக் கழற்றமுயற்சி செய்தார்.உடனே சுதாரித்துக்கொண்ட திரிபாதி தன்னுடைய ஷூவை கழட்டி தாக்குதலைத் தொடங்கினார். தொடர்ந்து சரமாரியாக தாக்கத்தொடங்கினார். இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தும் பயனில்லை. தாக்குதல் அதிகரிக்கவே, இடையில் நுழைந்த காவலர் இருவரையும் தடுத்தார். பா.ஜ.க எம்.பியும், பா.ஜ.க எம்.எல்.ஏவும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட காட்சிகள் வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோவின் இறுதியில் ஒருவரையொருவர் தரக்குறைவான வார்த்தைகளால் வசைபாடிக்கொண்டனர். இப்படியொரு நிகழ்வு அரங்கேறியும் அக்கட்சியின் தலைமை கண்டுகொள்ளவில்லை. சம்பந்தபட்டவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

Advertisements
Advertisements

Related posts