அதிர்ச்சியில் அமெரிக்கா, 5 லட்சம் பேருக்கு கொரோனா! ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் பலி

அமெரிக்காவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2037 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகையே உலுக்கு வரும் கொரோனா வைரஸ் 16,97,533 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 1,02,687 பேர் பலியாகியுள்ளனர். சிகிச்சை பெறுபவர்களில் சுமார் 50,000 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

Advertisements

சீனாவில் முதலில் பரவிய கொரோனா தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் 5,02,049 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 33,483 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்நாட்டில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2,037 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனவுக்கு பலியானோர் எண்ணிக்கை 18,719 ஆக அதிகரித்துள்ளது.

Advertisements

Related posts