கொரோனா அபாயத்தை மறைத்த சீனா மீது அமெரிக்க தொடர்ந்த வழக்கு

அமெரிக்காவின் மிஸ்சோரி மாகாண அட்டர்ணி ஜெனரல் எரிக் ஸ்மிட் மாவட்ட நீதி மன்றத்தில் சீன அரசுக்கு எதிராக ஒரு மாகாணமே வழக்கு தொடர்ந்தது இது முதல்முறையாகும்.

கொரோனா நோய் தொற்று காரணமாக மக்கள் பாதிக்க படுதல், நோய் தொற்று உருவாவதல், உயிர் இழப்பு ஏற்படுத்துதல், பொருளாதார சீரழிவு, தொழில் முடங்கியது என பல்வேறு காரணங்களை முன் வைத்து சீன அரசின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது அமெரிக்கா.

Advertisements

கொரோனா நோய் தொற்று குறித்து உலக நாடுகளிடம் சீனா பொய்யை கூறி நோயின் அபாயத்தை மறைத்துவிட்டது. நோய் தாக்கம் குறித்த தகவலை வெளிபடுத்திய மருத்துவரை கைது செய்து சித்தரவதை செய்தது. கொரோனா மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் என்பதை சீன சுகாதார அமைப்பு தகவலை மறைத்தது.

சீன அதிபர் ஜின் பிங் கூறிய பொய்யால் உலக நாடுகளில் லட்சகணக்கான மக்கள் பாதிக்கபட்டுள்ளனர்.

சீன அரசு மருத்துவ கருவிகள் கவச உடைகள் முக கவசம் என அனைத்தையும் பதுக்கியதுசீன என அந்த வழக்கில் குற்றசாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisements