டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை

டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisements

மத்திய அரசு கொண்டு வரவுள்ள இந்த அவசர சட்டத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா வைரசுக்கு எதிராக டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் துணிவுடன் போராடி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறோம். அவர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை என பதிவிட்டுள்ளார்.

Advertisements