இன்று சென்னை வருகிறார் மோடி

இன்று சென்னை வருகிறார் மோடி

இன்று சென்னை வரும் பிரதமர் மோடி பல்வேறு அரசுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதன் படி, இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் 5 ஆயிரத்து 150 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள எண்ணூர் திரவ எரிவாயு முனையத்தை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

Advertisements

இதை தொடர்ந்து தெற்கு ரெயில்வே சார்பில் 321 கோடியே 64 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 300 கிலோ மீட்டர் தூரத்திற்கான மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மேலும், சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். – ஜானகி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிலையையும் அவர் காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

Advertisements

Related posts