இது சண்டை போடவோ, அரசியல் செய்யவோ நேரம் அல்ல – ராகுல் நிதானமான பேட்டி

“இது சண்டை போடவோ, அரசியல் செய்யவோ நேரம் அல்ல. நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வைரசுடன் போர் செய்ய வேண்டிய தருணம் இது” என ராகுல்காந்தி கூறி உள்ளார்.

இந்தியாவின் 2 ஆம் கட்ட ஊரடங்கின் 2 ஆம் நாளான இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 414 ஆகவும் இருப்பதாக காலை 8 மணிக்கு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது. ராகுல்காந்தி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Advertisements


“நான் நிறைய விஷயங்களில் பிரதமர் மோடியுடன் ஒத்துப்போவதில்லை. ஆனால் தற்போது அப்படி அல்ல. இது நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வைரசுடன் போர் செய்ய வேண்டிய தருணம். இது சண்டை போடவோ, அரசியல் செய்யவோ நேரம் அல்ல.

எனது கருத்துக்களை விமர்சனமாக இல்லாமல் ஒரு ஆலோசனையாக எடுத்து கொள்ள வேண்டும். என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நிபுணர்களிடம் பேசினேன். நான் பேசுவது அதன் அடிப்படையில் தான். ஊரடங்கு என்பது ஒரு இடைக்கால நிவாரணம் போன்றது, இது கொரோனாவுக்கு ஒரு தீர்வு அல்ல.

இந்தியா ஒன்றுபட்டு வைரஸுக்கு எதிராக போராட வேண்டும். நாம் பழுதான கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது. வளங்களை திறம்பட பயன்படுத்த வேண்டும், அவற்றை மாநிலங்களுக்கும் கொடுக்க வேண்டும்.

பரிசோதனைகளை விரைந்து அதிகரிக்க வேண்டும். பரிசோதனையை அளவிட்டு அதை புள்ளிவிவர ரீதியாகப் பயன்படுத்த வேண்டும். கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்கு மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அதிகாரம் அளிக்க வேண்டும்” என கூறினார்.

Advertisements
Advertisements

Related posts