இதுவும் கடந்து போகும், ரஜினியின் ஆறுதல் வார்த்தைகள்

கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் மனித குலத்தியே நடுங்கவைத்துள்ளது. உலகின் வளர்ந்த நாடுகளே அந்த வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திணறி வருகின்றன.

இந்த வைரஸ் தொற்றால் உலகில் இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

Advertisements

இந்நிலையில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் அரசுகள் விதிக்கும் விதிமுறையை கடைபிடிக்குமாறு ரஜினிகாந்த் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு ஒரு இனிதான ஆண்டாக அமைய இறைவனிடம் வேண்டி கொள்கிறேன். இந்த கரோனா வைரஸால் முழு உலகமே பாதிப்பு அடைந்திருக்கிறது.

இதற்கு இந்தியாவும், தமிழ்நாடும் விதி விலக்கல்ல. உங்களை பிரிந்து வாழும் உங்களது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு சதா உங்களை பற்றிதான் சிந்தனை, உங்களை பற்றிதான் கவலை.

நீங்கள் எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ, அந்த நாடு அரசு என்ன கட்டுப்பாடு விதித்திருக்கிறார்களோ, அதை நீங்கள் தவறாமல் கடைபிடித்து, உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இந்த ஆண்டு நீங்கள் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு.

Advertisements

நலமுடன் வாழுங்க. கவலை படாதீங்க. இதுவும் கடந்து போகும்” என தெரிவித்துள்ளார்.

Advertisements

Related posts