கொரோனாவால் இறந்த கணவர் உடலை மூன்று நாட்களாக பாதுகாத்த மனைவி, நெஞ்சை உலுக்கும் சம்பவம்

அமெரிக்காவின் நியூயார்க்கில் கொரோனாவால் மரணமடைந்த கணவனின் சடலத்தை மீட்க மருத்துவமனை ஊழியர்கள் மூன்று நாட்கள் காத்திருக்க வைத்ததாக மனைவி ஒருவர் கண்கலங்கியுள்ளார்.

கொரோனாவால் மரணமடைந்த கணவரின் சடலத்தை குடியிருப்பில் இருந்து மீட்டுச் செல்ல மருத்துவமனை ஊழியர்கள் மூன்று நாட்கள் அவகாசம் கேட்ட நிலையில்,

Advertisements

57 வயதான டாமி ட்ரெட்வெல் என்பவர் தமது கணவரின் சடலம் அழுகாமல் இருக்க ஐஸ் கட்டைகளால் மூடும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக கண்ணீர் வடித்துள்ளார்.

தமது கணவர் கிரிகோரியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து உதவி கோரியுள்ளார் டாமி.

தகவல் அறிந்து வந்த மருத்துவ ஊழியர்கள், உயிர் காக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டும், கிரிகோரியை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

இதனையடுத்து அந்த குழுவினர் மருத்துவமனைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் 3 மணி நேரம் முதல் 3 நாட்கள் வரை காத்திருந்தால் மட்டுமே சடலத்தை குடியிருப்பில் இருந்து தற்போதைய சூழலில் மீட்க முடியும் என கூறியுள்ளனர்.

Advertisements

இதனால் செய்வதறியாது திகைத்த டாமி, மூன்று நாட்களில் சுமார் 20 இறுதிச் சடங்கு நடத்தும் இல்லங்களுக்கு தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார்.

இறுதியில் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த ஒரு குழுவினர் உதவ முன்வந்துள்ளனர். குடியிருப்பில் இறக்கும் கொரோனா நோயாளிகளின் சடலங்களை மீட்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நகர மேயரின் செயற்பாடு உண்மையில் வெட்கத்துக்குரியது என டாமி சாடியுள்ளார்.

62 வயதான தமது கணவர் சுமார் 5 நாட்கள் சளி மற்றும் லேசான இருமலுடன் காணப்பட்டதாகவும், ஆனால் வெள்ளிக்கிழமை அவர் காய்ச்சலுடன் அவதிப்பட்டதாகவும் டாமி தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ஒருவரிடம் தொலைபேசியில் ஆலோசனை கேட்ட நிலையில், மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் எனவும், குடியிருப்பில் தங்கியிருக்கவும் கூறியுள்ளார்.

இந்த நிலையிலேயே கிரிகோரி மரணமடைந்துள்ளார். அமெரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 738,830 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் எண்ணிக்கை 40,000 கடந்துள்ளது. நியூயார் மாகாணத்தில் மட்டும் இதுவரை 241,041 பேர்கள் கொரோனாவுக்கு இலக்காகியுள்ளனர்.

Advertisements

Related posts