கொரோனாவுக்கு எதிரான போராட்டம்: ஸ்வீடன் இளவரசி சோஃபியா எடுத்த முக்கிய முடிவு

ஸ்வீடனின் இளவரசி சோஃபியா கொரோனா நோயாளிகளை பராமரிக்கும் பொருட்டு மருத்துவமனை ஒன்றில் செவிலியராக இணைந்துள்ளார்.

இளவரசர் கார்ல் பிலிப்பின் மனைவியும் 34 வயதான இளவரசி சோஃபியா ஸ்டாக்ஹோமில் உள்ள சோபியாஹெம்மட் பல்கலைக்கழக கல்லூரியில் இதன் பொருட்டு மூன்று நாள் பயிற்சி ஒன்றையும் மேற்கொண்டுள்ளார்.

Advertisements

குறித்த பயிற்சியில் தேற்சி பெற்றுள்ள இளவரசி சோஃபியா தற்போது செவிலியர் பணியில் இணைந்துள்ளார்.

குறித்த பல்கலைக்கழகமானது வாரத்திற்கு 80 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்து, கொரோனா பாதிப்புக்கு எதிராக போராடும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு உதவ தயார் செய்து வருகிறது.

இந்த இக்கட்டான சூழலில் தமது பங்களிப்பும் வேண்டும் என இளவரசி சோஃபியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அரண்மனை அவரை குறித்த பயிற்சிக்கு அனுமதித்துள்ளது.

ஸ்வீடனின் பிரபல மொடலாக வலம்வந்த சோஃபியா கடந்த 2015 ஆம் ஆண்டு இளவரசர் கார்ல் பிலிப்பை திருமணம் செய்து கொண்டார்.

Advertisements

ஸ்வீடனில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கானவர் எண்ணிக்கை 11,927 என பதிவாகியுள்ளது.

சிகிச்சை பலனின்றி இதுவரை 1203 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 170 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

ஆனால் ஸ்வீடன் இதுவரை ஊரடங்கு உத்தரவை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements