மருத்துவமனை வாசலில் இருந்து கதறி அழுத மகள், துடிதுடித்துப்போன செவிலியரான தாய்

கொரோனா வார்டில் செவிலியாராக பணியாற்றும் பெண்ணும், அவருடைய 3 வயது மகளும் மருத்துவமனையின் முன்பு பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் பலரையும் உருக வைத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது

Advertisements

இந்நிலையில், பெலகாவி மாவட்டம் பால்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுனந்தா(31). இவருக்கு திருமணம் முடிந்து 3 வயதில் ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளாள். சுனந்தா பெலகாவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 4 ஆண்டுகளாக செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.

சுனந்தா, தனியார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றி வருகிறார். இதனால் கொரோனா பிரிவு என்பதால் சுனந்தா வீட்டிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த 15 நாட்களாக சுனந்தா வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனையிலையே பணியாற்றிவருகிறார். அதனால் தாயை பார்க்கவேண்டும் என்று குழந்தையும் பரிதவித்து வந்துள்ளது.

அந்த குழந்தை தினமும் அம்மாவை பார்க்க வேண்டும் என்று தந்தையிடம் கூறி கதறி அழுது வந்துள்ளாள். இந்த நிலையில் நேற்று, ஐஸ்வர்யாவை அவளுடைய தந்தை, தனது மனைவி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

Advertisements

இதுகுறித்து சுனந்தாவுக்கும் அவர் தகவல் தெரிவித்தார். சுனந்தா, கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றி வருவதால், தூரத்தில் நின்றப்படி தாய் சுனந்தாவை தனது குழந்தைக்கு அவர் காண்பித்துள்ளார்.

சுனந்தாவை பார்த்ததும், குழந்தை ஐஸ்வர்யா, ‘அம்மா… அம்மா.. வா.. மா.. போகலாம்…’ என்று கதறி அழுதுள்ளாள். தனது குழந்தை அழுவதை பார்த்தும், நீண்ட நாட்களுக்கு பிறகு குழந்தையை பார்த்தும் தன்னால் அவளை தூக்கி கொஞ்ச முடியவில்லையே என்ற ஏக்கத்தில் சுனந்தாவும் கண்ணீர் விட்டு அழுதார்.

மருத்துவமனை வாசலில் இருந்து கதறி அழுத மகள், துடிதுடித்துப்போன செவிலியரான தாய்

மருத்துவமனை வாசலில் இருந்து கதறி அழுத மகள், துடிதுடித்துப்போன செவிலியரான தாய்

Posted by Today Main News on Saturday, April 11, 2020

தாய்-மகளின் இந்த பாசப்போராட்டம் அங்கிருந்தவர்களின் அனைவரும் இந்த காட்சியை பார்த்து ஒருநிமிடம் கண்கலங்கி போனார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏராளமானோர் சுனந்தாவின் பணியை பாராட்டி வருகிறார்கள்.

Advertisements