வெறும் 22 நாளில் ஊர்மக்ககளை திரும்பிப் பார்க்க வைத்த தம்பதி

மகாராஷ்டிரா மாநிலம் வாசிம் நகரை அடுத்த ஜம்கேட் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்தாஸ் போபலே. இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் இவர்களது கிராமத்தில் சில மாதங்களாக கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு கூட போதிய அளவு தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.

Advertisements

இதனால் ராம்தாஸ் போபலே ஒரு கிணறு தோண்ட நினைத்துள்ளார். இதனை அடுத்து தனது மனைவி மற்றும் மகனுடன் தனது வீட்டின் முன் கிணறு தோண்டும் வேலையை ஆரம்பித்துள்ளார்.

இதனைப் பார்த்த அக்கிராம மக்கள் அவர்களை கிண்டல் செய்து சிரித்துள்ளார். ஆனால் ராம்தாஸ் போபலே குடும்பம் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், கிணறு தோண்டும் வேலையில் மட்டும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த குடும்பம் 20 நாட்களாக 22 அடிக்கு கிணறு தோண்டியுள்ளது. இவர்களது விடாமுயற்சிக்கு கிடைத்த பலனாக கிணற்றில் தண்ணீர் வர ஆரம்பித்துள்ளது. இதனைப் பார்த்த ஊர்மக்கள் வியந்துபோயுள்ளனர்.

தற்போது தங்களது ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் கிணற்றை இன்னும் ஆழமாக தோண்ட முடிவெடுத்துள்ளதாக ராம்தாஸ் போபலே தெரிவித்துள்ளார்.

Advertisements

தண்ணீர் பஞ்சத்தைப் போக்க ஒரு தம்பதி 22 நாட்களில் கிணறு தோண்டிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisements