மனிதர்களிடமிருந்து வௌவால்களுக்கு கொரோனா பரவுவது பேரழிவை ஏற்படுத்தும்

மனிதர்களிடமிருந்து வௌவால்களுக்கு கொரோனா பரவுவது அபூர்வம்தான், ஆனால் அப்படிப் பரவினால் அது பயங்கர பேரழிவை ஏற்படுத்தும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

ஆகவே, உயிரியலாளர்களும் வனத்துறை தன்னார்வலர்களும் கொரோனா பரவும் இந்த காலகட்டத்தில் வௌவால்களை கையாளவேண்டாம் என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

Advertisements

கனேடிய வனத்துறை நல கூட்டுறவு அமைப்பான CWHC. வௌவால்கள் தொடர்பான பணிகளை நிறுத்துமாறு பரிந்துரைக்க இருப்பதாக வின்னிபெக் உயிரியலாளர் Craig Willis தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றிய உயிரியலாளர்களிடமிருந்து வௌவால்களுக்கு கொரோனா பரவுவது அபூர்வம்தான், ஆனால் அப்படிப் பரவினால் அது பயங்கர பேரழிவை ஏற்படுத்தும் என்கிறார் Willis.

அப்படி ஒருவேளை பரவினால், பல மில்லியன் வௌவால்கள், கொரோனாவைப் பரப்பும் உயிரினங்களாக மாறிவிடும் என்கிறார் அவர்.

அப்படி நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்றாலும், ஒருவேளை அப்படி நடந்துவிட்டால் மக்கள் மீது ஏற்படும் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும்.

Advertisements

ஏற்கனவே, கொரோனா வௌவால்களிடமிருந்துதான் பரவியது என்கிற கருத்து நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.

ஆனால், உண்மையில் அது எங்கிருந்து வந்தது என்பது யாருக்கும் தெரியாது என்று கூறும் Willis, ஒருவேளை அது வட அமெரிக்க வௌவால் இனமான சிறு பழுப்பு வௌவாலிடமிருந்து கூட இருக்கலாம் என்கிறார்.

ஏற்கனவே கையுறைகள் மாஸ்குகள் ஆகியவை குறைவாக இருக்கும் நிலையில், அவற்றை இப்போதைக்கு மக்களுக்கு பயன்படுத்துவதை விட்டு வௌவால்கள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவது நன்றாக இருக்காது என்கிறார் Willis.

ஆகவேதான் இப்போதைக்கு வௌவால்கள் மீதான ஆராய்ச்சிகளை தொடரவேண்டாம் என்கிறார் அவர்.

Advertisements