சத்தியம் தொலைக்காட்சி மூடப்பட்டதா? ஏன்? – நிர்வாக இயக்குனர் விளக்கம்

சத்தியம் தொலைக்காட்சி மூடப்பட்டதா? ஏன்? எதற்கு? என்பதை விளக்கி அதன் நிர்வாக இயக்குனர் ஐசக் லிவிங்ஸ்டன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

“சத்தியம் தொலைக்காட்சியில் பணியாற்றும் ஒரு சகோதரருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. வேறு சில தொலைக்காட்சி ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

Advertisements

இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் விதமாக சத்தியம் தொலைக்காட்சி நேற்றும் இன்றும் தனது செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளது.

யார் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை நம்முடைய சேனல் ஒளிபரப்பியாக வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. மற்ற ஊடகங்களுக்கு முன்மாதிரியாக, சமூக அக்கறையுடன் இதனை செய்துள்ளோம். வெகு விரைவில் சத்தியம் தொலைக்காட்சி அதே உத்வேகத்துடன் மீண்டும் செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

Related posts