கடும் எதிர்ப்புகளுகிடையே தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனு ஏற்பு

கடும் எதிர்ப்புகளுகிடையே தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனு ஏற்பு
தூத்துக்குடி தொகுதியில்தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., பா.ஜனதா சார்பாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உள்பட 48 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனு பரிசீலனை மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரி முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் தமிழிசை இயக்குனராக உள்ள விவரத்தை வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Advertisements

இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனு மீதான பரிசீலனை மதியம் 1.30 வரை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர், வேட்பு மனு பரிசீலனை தொடங்கியபோதும் திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

எனவே, தமிழிசையின் மனுவில் உள்ள அனைத்து அம்சங்களையும் தீவிரமாக பரிசீலனை செய்தனர். அதன்பின்னர் அவரது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்றுக்கொண்டார்.

Advertisements

Related posts