பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் – அரசு எச்சரிக்கை

டெல்லியில் பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது. அதை பின்பற்றி, டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளும் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கும், சிறுநீர் கழிப்பதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளன.

Advertisements

இதை மீறுவோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisements