இந்திய மருத்துவருக்கு கொரோனா சேவையைப் பாராட்டி அளிக்கப்பட்ட சிறப்பு மரியாதை

ந்திய வம்சாவளி மருத்துவரான உமா மதுசூதனா வுக்கு அவருடைய கொரோனா சேவையைப் பாராட்டிச் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது

மைசூரை சேர்ந்த மருத்துவரான உமா மதுசூதனா அமெரிக்காவில் சவுத் விண்ட்ஸர் பகுதியில் புகழ் பெற்ற மருத்துவர் ஆவார்.

Advertisements

இவர் இந்தியாவில் தனது எம் பி பி எஸ் படிப்பை முடித்துள்ளார்.

அதன் பிறகு நியூயார்கில் உள்ள புரூக்லின் வுட் ஹல் மெடிகல் செண்டரில் ஹவுஸ் சர்ஜன் படிப்பை முடித்தார்

இப்போது உமா மதுசூதனா சவுத் விண்ட்ஸர் பகுதியில் உள்ள மருத்துவ மனையில் கொரோனா நோயாளிகளுக்கு துணிச்சலாகச் சேவை செய்துள்ளார்.

அவர் சேவையைப் பாராட்டி சவுத் விண்ட்ஸர் மக்கள் அவர் வீட்டுக்கு முன்பு வரிசையாக காரில்  வந்து மரியாதை செலுத்தி உள்ளனர்.

Advertisements

உமா மதுசூதனா தந்து வீட்டின் வாயிலில் நின்று அந்த மரியாதையை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பலரும் உமா மதுசூதனாவின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி உள்ளனர்.

Advertisements