சத்தியமங்கலம் அருகே காய்ந்த மரம் செடிகளில் பரவும் தீயால் வனப்பகுதி நாசம்

சத்தியமங்கலம் அருகே காய்ந்த மரம் செடிகளில் பரவும் தீயால் வனப்பகுதி நாசம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பவானிசாகர், கேர்மாளம் வனச்சரகங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. மேட்டுப்பாளையம் சாலையையொட்டியுள்ள விளாமுண்டி பகுதியில் காய்ந்த மரம் செடி கொடிகளில் தீ பரவியதால், தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Advertisements


இதே போன்று கேர்மாளம் அருகே மற்றொரு பகுதியிலும் காட்டுத் தீயில் மரங்கள் எரிந்து சாம்பலாகின. அங்கும் தீயை அணைக்க கடுமையான போராட்டம் மேற்கொள்ளப்பட்ட போதும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது

Advertisements