தினக்கூலிப் திரைத்துறை பணியாளர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.3000 செலுத்தும் சல்மான் கான்.

தினக்கூலிப் திரைத்துறை பணியாளர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.3000 செலுத்தும் சல்மான் கான்.

இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத் துறையில் பணியாற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisements

இவர்களுக்கு உதவும் விதமாக அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக நடிகர் சல்மான்கான் நிவாரணத் தொகையை செலுத்தி வருவதாக இந்திய சினிமா ஊழியர்கள் சம்மேளனத்தின் (FWICE) தலைவர் பி.என்.திவாரி கூறியுள்ளார்.

தவணை முறையில் அவர்களுக்கு பணம் செலுத்துவதாக கூறிய சல்மான் கான், தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் முதற்கட்டமாக தலா 3000 ரூபாயை செலுத்தியுள்ளார். சில நாட்கள் கழித்து மீண்டும் மற்றவர்களுக்கு பணம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.

Advertisements