கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி – திமுக தோழமைகட்சிகள் தீர்மானம்

திமுக தலைமையில் நடைபெற்ற தோழமைக் கட்சி கூட்டத்தில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்பது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக தோழமைக் கட்சி தலைவர்கள் 11 பேருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

Advertisements

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு உள்ளன என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கி.வீரமணி, வைகோ, ஈஸ்வரன், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்த இந்த கூட்டம், காவல்துறையின் அனுமதி மறுப்பால் இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் உயிரிழப்பிற்கு வழங்கப்படும் ரூ.10 லட்சம் நிவாரணம் போதாது.கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும். தடுப்பு பணியாளர்கள் உயிரிழந்தால் குடும்பத்திற்கு ரூ.1கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட திமுக தலைமையில் நடைபெற்ற தோழமைக் கட்சி கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisements
Advertisements

Related posts