மோடி, ‘கேவலம்’ நடிகைகளை சந்தித்தார் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு ராதிகா கண்டனம்

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தாழ்த்தி விடாதீர்கள்: ஸ்டாலினுக்கு ராதிகா அறிவுரை

விவசாயிகளை சந்திக்காத பிரதமர் மோடி, ‘கேவலம்’ நடிகைகளை சந்தித்தார் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என, நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

Advertisements

சமீபத்தில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழக விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுடன் டெல்லிக்கே சென்றனர். டெல்லியில் 100 நாட்கள் போராட்டம் நடத்தினர்.

‘எங்களை அழைத்துப் பேசுங்கள்’ என விவசாயிகள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அழைத்துப் பேசினாரா? பெரும்பணக்காரர்கள், தொழிலதிபர்கள், நடிகர்களை அழைத்துப் பேசினார். ‘கேவலம்’ நடிகைகளை அழைத்துப் பேசினார். ஸ்டாலின் பேசியோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகைகளை இவ்வாறு பேசியதற்கு நடிகை ராதிகா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நடிகை ராதிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மு.க.ஸ்டாலினை டேக் செய்து அவர் பதிவிட்டதாவது: “ஸ்டாலின், நடிகைகள் குறித்த உங்களின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது.

உங்கள் குடும்பத்துடன் பல ஆண்டுகளாக நல்லுறவை நாங்கள் கொண்டுள்ளோம். உங்கள் தந்தையை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளோம். உங்கள் குடும்பத்தையும், உங்களையும் தாழ்த்தி விடாதீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

Advertisements
Advertisements

Related posts