ATM இயந்திரங்களைப் பெயர்த்து சென்ற கொள்ளையர்கள்

புனேவில் ஏ.டி.எம் இயந்திரங்களைப் பெயர்த்து கொண்டு சென்ற கொள்ளையர்கள்

மகாராஷ்டிர மாநிலம் புனே புறநகர்ப் பகுதியான பிம்ப்ரியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கிச் சென்று 30 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

Advertisements

பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் ஏடிஎம் இயந்திரம் மாயமாகி விட்டதைக் கண்டு அதிர்ச்சியைடந்து காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவு நேரத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தின் மின் இணைப்புகளைத் துண்டித்து விட்டு ஏடிஎம் இயந்திரத்தைப் பெயர்த்து தூக்கிச் சென்று விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.கண்காணிப்பு கேமராவின் ஓயர்களையும் கொள்ளையர்கள் துண்டித்து விட்டதால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை

Advertisements