கொரோனா ஊரடங்கை தளர்த்தலாமா எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

கொரோனா ஊரடங்கை தளர்த்தலாமா என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் அதனால் நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் அவர் பேசினார்.

லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் 5 எம்.பி.,க்களுக்கு மேல் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisements

காங்கிரஸ் சார்பில், குலாம்நபி ஆசாத், திரிணமுல் காங்கிரசின் சுதிப் பந்தோபத்யாய், சிவசேனாவின் சஞ்சய் ராவத், பிஜூ ஜனதா தளத்தில் பினகிமிஸ்ரா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி சார்பில் கோபால்யாதவ், சிரோன்மணி அகாலிதளம் சார்பில் சுக்பீர் சிங்பாதல், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மிஸ்ரா, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் விஜய் சாய்ரெட்டி,, மிதுன் ரெட்டி, ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ரஞ்சன் சிங், திமுக சார்பில் டிஆர்பாலு, அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் , டில்லி முதல்வர் கெஜ்ரிவால், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வீடியோ கானபெரென்சிங் முறையில் நடந்த இந்த கூட்டத்தில் சொல்லப்பட்ட ஆலோசனைகள் அடிப்படையில், ஊரடங்கை தளர்த்துவது பற்றிய முடிவு எடுக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

Advertisements

Related posts