இறந்த பெண்ணின் உடலை இறுதிமரியாதை செய்து அடக்கம் செய்த போலிஸார்! குவியும் பாராட்டுகள்

உத்தர பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு சமயத்தில் இறந்த பெண்ணின் உடலைப் போலிஸாரே அடக்கம் செய்தது சமூகவலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாத நிலையில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களை வீடுகளில் முடங்கிக் கிடக்கும் படி போலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisements

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சஹரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷன்பூர் கிராமப் பெண் மீனா என்பவர் குடும்பம் இல்லாமல் தனியே வாழ்ந்து வந்துள்ளார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மீனா கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இறந்துவிடவே அவருக்கு இறுதிமரியாதை செலுத்த கூட ஆள் இல்லாமல் இருந்துள்ளது.

இந்நிலையில் அந்த பகுதியில் பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் தீபக் சவுத்ரி உள்ளிட்ட காவலர்கள் மீனாவுக்கு இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்துள்ளனர். இது சம்மந்தமானப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி போலிஸாருக்குப் பாராட்டுகளை பெற்றுத் தந்துள்ளது.

Advertisements