தொழிற்சாலைகள் திறப்பது தொடர்பாக தொழிலதிபர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

மிழகத்திலும் கொரோனா  ஊரடங்கு காரணமாக தொழில்கள் முடங்கி உள்ள நலையில், தொழில் அதிபர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது,  தமிழகத்தில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது தொடர்பாக தொழிலதிபர்களுடன் விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும்  தொழிற்சாலைகள் இயங்கும் பட்சத்தில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisements

நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில்,  20-ம் தேதிக்கு பிற்கு சில தளர்வுகளை மாநில அரசு விரும்பினால் செய்யலாம் என மத்தியஅரசு அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ளதால்,  தளர்வு இல்லை ஊரடங்கு நீடிக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று முதல்வர் தொழிலதிபர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில்,  டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், முருகப்பா குழுமத்தின் தலைவர் வெள்ளையன்,  டி.வி.எஸ். அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் தினேஷ், ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வெங்கடராமராஜா, தோல் ஏற்றுமதிக் குழுமத்தின் தலைவர் அகீல் அகமது, இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஹரி தியாகராஜன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் ஆகிய தொழிலதிபர் களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் க.சண்முகம், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisements