கொரோனாவை சமாளிப்பதில் ஒரு சில நாடுகள் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ளன – பில்கேட்ஸ்

கொரோனா வைரஸ் கையாண்ட விதத்தில் ஒரு சில நாடுகள் மட்டுமே அதன் பாதிப்பை ஒழுங்காக புரிந்து, கணித்து கையாண்டுள்ளதாக உலக கோடீஸ்வரரான பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றைக் கையாண்ட விதத்தில் ஒருசில நாடுகள் மட்டுமே அதன் பாதிப்பை ஒழுங்காகப் புரிந்து, கணித்துக் கையாண்டுள்ளன. சரியான முதலீடுகளும், இப்படியான தொற்றுக்குச் சரியான தயாரிப்பும் இல்லாமல் போனதால் நாம் திக்கு தெரியாத நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார்.

Advertisements

கொரோனா கிருமி தொற்றுக்கான தடுப்பு மருந்தை உருவாக்க பில்கேட்ஸின் அறக்கட்டளை நிதி அளித்து வருகிறது. இந்த 7 மருந்துகளில் சிறந்த இரண்டு மருந்துகள் கடைசி கட்ட பரிசோதனைக்குச் செல்லும். இந்த மருந்துகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை உருவாக்கவும் கேட்ஸின் அறக்கட்டளை நிதி அளிக்கிறது.

இந்தத் தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதித்துப் பார்க்க 12-18 மாதங்கள் வரை ஆகும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். வளர்ந்த நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு உதவுவதோடு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கும் உதவ வேண்டும் என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதமே, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, தேசிய அளவில் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட 100 மில்லியன் டாலர்களை தரும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Related posts