வல்லரசு நாடுகள் திணறிக்கொண்டு இருக்கும் நேரத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்த நாடு

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் திணறிக்கொண்டு இருக்கும் நேரத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக நார்வே நாடு அறிவித்துள்ளது.

இதுவரை நார்வேயில் 5760 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். 74 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர்.

Advertisements

கொரோனா என்ற கொடிய நோயைக் கட்டுப்படுத்த தங்களுக்கு உதவிய 2 காரணிகளாக நார்வே மக்கள் குறிப்பிடுவது 2 விஷயங்கள் : விரைவான பரிசோதனை மற்றும் தீவிர ஊரடங்கு

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி நார்வே நாட்டில் முதல் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து உடனடியாக நாடு முழுவதும் 20 பரிசோதனை மையங்களை அமைத்தது.

மேலும் மார்ச் 12-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவினையும் அந்நாடு உடனடியாக அமலுக்கு கொண்டு வந்தது. நார்வே நாட்டின் கொரோனா பரிசோதனை மிகப்பெரிய அளவில் இருந்தது. அமெரிக்காவில் தற்போது 10 லட்சம் பேருக்கு 18 ஆயிரத்து 996 பேருக்கு பரிசோதனை என்ற அளவிலேயே பரிசோதனை இருக்கும் நிலையில் நார்வேயில் 10 லட்சம் பேருக்கு ஒரு லட்சத்து ஆயிரத்து 986 என்ற விகிதத்தில் பரிசோதனை இருந்தது.

vvஅமெரிக்காவை விட ஐந்து மடங்கு வேகமாக நோயாளிகளை கண்டறிந்து உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கான சிகிச்சையை நார்வே அளித்தது. நோய் அறிகுறி தென்பட்ட நிலையிலேயே கண்டறியப்பட்டதால் அங்கு கொரோனா சமூக பரவலாக மாறாமல் தடுக்கப்பட்டது. இதன் காரணமாக ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து கொரோனா தொற்று அங்கு குறைய ஆரம்பித்து உள்ளது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக அந்நாடு அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.

Advertisements
Advertisements

Related posts