நர்ஸ் முகத்திலேயே கடித்து வைத்த கொரோனா நோயாளி, அதிர்ந்த ஹாஸ்பிடல், பரபரப்பு காரணம்

தனிமைப்படுத்தப்பட்டு வைத்திருந்த நைஜீரிய கொரோனா வைரஸ் நோயாளி தனிமையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் சீன செவிலியரை முகத்தில் தாக்கி கடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவிலுள்ள வூகான் மாகாணத்திலிருந்து பரவ ஆரம்பித்தது. தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் தன்னுடைய கோரத்தாண்டவத்தை காட்டிவிடுகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு சரியான மருந்து இதுவரை கண்டுபிடிக்காத தால் மருத்துவர்கள் நோயாளிகளை தனிமைப்படுத்தி குணமடைய செய்கின்றனர்.

அவ்வராக நோயாளிகளைப் தனிமைப்படுத்தும் பொழுது அவர்கள் மனதளவில் மிகவும் பாதிப்படைகிறார்கள். அந்த வகையில் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒகான்க்வொன்வோய் சிகா பேட்ரிக் (வயது 47) கடந்த மார்ச் 20 ஆம் தேதி அன்று வெளிநாட்டிலிருந்து தெற்கு சீனாவின் குவாங்சோ நகரத்திற்கு வந்திருக்கிறார். அப்படியாக வந்தவருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது.

Advertisements

இதனையடுத்து அவர் சீனாவில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தேவையான முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டன. சீன நாட்டு செவிலியர் திருமதி.வாங் , கடந்த ஏப்ரல் 1 ம் தேதி திரு ஒகோன்க்வொன்வோயிடம் இரத்த பரிசோதனை செய்யச் சொன்னபோது, ​​நோயாளி அவரை புறக்கணித்து, தனது தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து வெளியேற முயன்றார்.

நைஜீரிய குடிமகன் வெளியேறுவதைத் தடுக்க முயன்றபோது சீன செவிலியரை அவர் கீழே தள்ளிவிட்டு முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் கடித்து துன்புறுத்தி இருக்கிறார். இதனால் அந்த செவிலியர் பலத்த காயங்கள் அடைந்திருக்கிறார். இதுகுறித்து சீன பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

தற்போது அந்த நைஜீரிய நாட்டு குடிமகனுக்கு சீன போலீசாரின் மேற்பார்வையுடன் அதே மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து வைரஸ் தொற்றில் இருந்து விடுபட்ட பின்பு அவர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படும் என சீன போலீசார் கூறியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், சீன நாட்டிற்குள் வரும் பயணிகள் அனைவரும் சீனாவில் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் வைரஸ் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பதை காவல்துறை மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

Advertisements
Advertisements