அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலி

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகி விட்டதாக உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. ஊரடங்கு, சமூக இடைவெளி பராமரிப்பு, முக கவசம் அணிதல் என்று கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் கூட அமெரிக்கர்களை கொரோனா வைரஸ் விடாமல் துரத்தி வருகிறது. 5 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்களை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.

Advertisements

கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் தினம்தோறும் கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 40-க்கும் மேற்பட்ட இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் கொரோனா வைரசால் உயிரிழந்து இருப்பது அவர்களின் குடும்பங்களை தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பலியானவர்களில், அதிகபட்சமாக கேரள மாநிலத்தை சேர்ந்த 17 பேர் அடங்குவார்கள்.

குஜராத்தை சேர்ந்த 10 பேர், பஞ்சாப் மாநிலத்தின் 4 பேர், ஆந்திராவின் 2 பேர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒருவரும் பலியாகி இருப்பதாக வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. மற்றவர்களைப் பற்றிய விவரம் தெரிய வரவில்லை.

உயிரிழந்தவர்களில் ஒருவர் மட்டும் 21 வயதானவர், மற்ற அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

Advertisements

கொரோனாவின் மையமாக நியூயார்க்தான் உருவாகி உள்ளது. இங்கும், அதன் அண்டை மாநிலமான நியூஜெர்சியிலும் இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

கொரோனாவுக்கு பலியானவர்களில் 12-க்கும் மேற்பட்டவர்கள் நியூஜெர்சி மாகாணத்தில், குறிப்பாக ஜெர்சி நகரின் லிட்டில் இந்தியா மற்றும் ஓக் ட்ரீ ரோடு பகுதியில் வசித்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

நியூயார்க்கில் மட்டுமே இந்திய வம்சாளியினர் 15 பேர் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள். பென்சில்வேனியாவிலும், புளோரிடாவிலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியாவில் தலா ஒரு இந்திய வம்சாவளியினர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Advertisements

Related posts