12,000 சோதனை கிட்கள் சென்னை வந்தன – எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய 12 ஆயிரம் சோதனை கிட்கள் சென்னைக்கு வந்து சேர்ந்துள்ளன. இவை அனைத்தும் பயன்பாட்டுக்கு வருமானால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் தீவிரமுடன் பரவி வரும் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை இன்று வரை 480 ஆக உயர்ந்து உள்ளது. தொடர்ந்து மக்களிடையே கொரோனா பாதிப்பு பற்றி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. எனினும், உடனடியாக முடிவுகள் தெரிவதற்கு போதிய மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் இந்தியாவில் இல்லை. இதனால் உபகரணங்கள் வாங்குவதற்கு சீனாவிடம் இந்தியா ஆர்டர் கொடுத்திருந்தது.

Advertisements


இவற்றில், ஆன்டிபாடி பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஆர்.என்.ஏ. பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்ட கொரோனா பரிசோதனைக்கு தேவையான 6.5 லட்சம் மருத்துவ உபகரணங்கள், சீனாவின் குவாங்சூ விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன.

இவற்றில் கொரோனா பரிசோதனைக்கான 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் (ஆர்.டி.) உபகரணங்கள் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு நேற்று வந்து சேர்ந்தன. இந்த ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் மூலம் கொரோனா சோதனை முடிவுகளை விரைவாக அறிய முடியும்.

தொடர்ந்து, தமிழகத்திற்கு ஆர்.டி. கிட் (ரேபிட் டெஸ்ட் கிட்) வழங்க வேண்டும் என முதல் அமைச்சர் பழனிசாமி மத்திய அரசுக்கும் வேண்டுகோள் விடுத்த நிலையில், 12 ஆயிரம் கிட்கள் சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்தடைந்து உள்ளன.

இந்த ஆர்.டி. கிட் (ரேபிட் டெஸ்ட் கிட்) எனப்படும் துரித பரிசோதனை உபகரணங்களை கொண்டு பரிசோதனைகள் செய்து கொரோனா பாதித்த நபரா? அல்லது இல்லையா என 45 நிமிடங்கள் முதல் 2 மணிநேரத்தில் உறுதி செய்ய முடியும். சென்னை வந்துசேர்ந்த 12 ஆயிரம் சோதனை கிட்கள் அனைத்தும் பயன்பாட்டுக்கு வருமானால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Advertisements
Advertisements