நாமெல்லாம் பாதுகாப்பாக இருப்பதற்கு மோடிதான் காரணம் பிரதமர் மோடி – முதல்வர் பழனிசாமி

பாரத நாட்டை வழிநடத்த தகுதி படைத்தவர் பிரதமர் மோடி என்று பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி உரை நிகழ்த்தினார். மேலும் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து, அபிநந்தனை விரைவாக மீட்டவர் பிரதமர் மோடி என்றும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார்.

தொடர்ந்து மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி அளிக்க வேண்டும். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என்றும் முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

Advertisements

சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெறும் அதிமுக கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், என்.ஆர் காங். தலைவர் ரங்கசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, ஏசி சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Advertisements