தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் (13-04-2020)

நாகை
சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் வீதியில் மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்ற 2 கடைகளுக்கு சீல்.
சீர்காழி வட்டாட்சியர் சாந்தி நடவடிக்கை

திருப்பூரில் ஒரே நாளில் 18பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அச்சம்

Advertisements

சென்னை
கொரோனா சிகிச்சை அளிக்கும் மையமாக மாறுகிறது நந்தம்பாக்கம் வர்த்தக மையம்.
ஆயிரத்திற்கு மேற்பட்ட படுக்கைகளை அமைக்கும் பணி தீவிரம்.

சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், வாழப்பாடி, அருநூத்துமலை, காரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் கடத்தியதாக 23 பேர் கைது. 185 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்.
500 லிட்டர் ஊறல் அழித்து காவல்துறையினர் நடவடிக்கை

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் முக்கிய தெருக்கள் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருவாரூர்
ஊரடங்கு உத்தரவால் வருவாய் இழந்து குடும்பத்தை நடத்த முடியாத விரக்தியில் இளைஞர் ஜெயபால் திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலய வடக்கு ராஜகோபுரத்தின் மேல் இருந்து கீழே குதித்து தற்கொலை

Advertisements

தஞ்சை
கும்பகோணத்தை அடுத்த செம்மங்குடி கடைவீதியில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் காவல்துறையினர், சுகாதார துறை அதிகாரிகள் பங்கேற்ற உறுதி மொழி எடுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றி திரிந்ததாக 1636 வழக்குகள் பதிவு.
1942 பேர் கைது, 1020 வாகனங்கள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2845 வழக்குகள் பதிவு.
5 கார்கள், 5 ஆட்டோக்கள்,1398 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

விருதுநகர்
அருகே குல்லூர்சந்தை கிராமத்தில் 19 வயதான பாலுமுனியாண்டி என்பவர் நண்பர்களுடன் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது மூச்சு திணறி நீரில் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 144 தடை உத்தரவை மீறியதாக 557 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 604 பேர் கைது.
செய்யப்பட்டுள்ளனர். 530 மோட்டார் சைக்கிள்கள் மூன்று கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை புறநகரில் ரூ 49 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில்
இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக
3,174 வழக்குகள் பதிவு.
3,247 பேர் கைது.
2,356 இருசக்கர வாகனங்கள், 49 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 32 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கடினல்வயல் கிராமத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வெளிமாநில, மாவட்ட ஆட்களை அழைத்து வந்து செயல்பட்டு வரும் தனியார் ரசாயன உப்பு உற்பத்தி தொழிற்சாலையை கண்டித்து கிராம மக்கள் சமூக இடைவெளி விட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் மருத்துவக்குழு கொரோனா தொற்று இருக்கிறதா என நேரில் சென்று பரிசோதனை செய்யும் வகையில் 18 கார்கள் வழங்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மாநகராட்சி மருத்துவர்களுக்கு கார்களையும் அதற்கான பாஸ்களையும் வழங்கினார்

சென்னை எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த 8 வெளிநாட்டினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டில் தனிப்படுத்தப்பட்டிருந்த 8 பேரும் ஊரடங்கின் போது சுற்றித்திரிந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைக்கு பெற்று வந்த 60 வயதான மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மருத்துவரின் உடலை தகனம் செய்ய அம்பத்தூர் மயானத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னையை அடுத்த திருவேற்காடு மயானத்தில் மருத்துவரின் உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

கோவை: சிங்காநல்லூரில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் உட்பட 10 பேர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முகக்கவசம் அணியாமல் மக்கள் வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார்.

Advertisements