படுக்கைக்கு அழைத்த போன் கால் : விளாசி எடுத்த பிரபல நடிகை

வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒருவர் போன்கால் மூலமாக தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், அவரை தான் விளாசி எடுத்ததாகவும் நடிகை மான்வி கக்ரூ தெரிவித்துள்ளார்.

நோ ஒன் கில்டு ஜெசிகா, ஆமீர் கானின் பிகே உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்தவர் மான்வி கக்ரூ. டிவி சீரியலிலும் நடித்த அவர் தற்போது வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். அந்த பேட்டியில் மான்வி கூறியதாவது :

Advertisements

“கடந்த ஆண்டு ஒரு எண்ணில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. போனை எடுத்துப் பேசினால் என்னிடம் பட்ஜெட் பற்றி பேசினார்கள். முதலில் ஸ்க்ரிப்ட்டை சொல்லுங்கள், எனக்கு பிடித்து, என்னை நடிக்க வைக்க நீங்கள் விரும்பினால் அதன் பிறகு பணம், டேட்ஸ் மற்றும் பிற பற்றி பேசலாம் என்றேன். உடனே அந்த நபர் பட்ஜெட் ஓகேவா என்று நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்.

பட்ஜெட் ஓகே இல்லை, இது ரொம்பவே குறைவு என்று நான் அந்த நபரிடம் கூறினேன். உடனே அந்த ஆள் பட்ஜெட்டை மூன்று மடங்காக உயர்த்திக் கூறினார். ‘நான் உங்களுக்கு இந்த அளவு பணமும் தர முடியும், ஆனால் நீங்கள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்’ என்றார். அதை கேட்டு எனக்கு கோபம் வந்துவிட்டது.

மீ டு இயக்கத்திற்கு பிறகும் இது போன்று நடப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அந்த ஆள் கூறியதை கேட்டு எனக்குள் என்ன ஆனது என்று தெரியவில்லை, அவரை நான் விளாசினேன். எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி கேட்பீர்கள், போனை வைக்கவும். நான் போலீசில் புகார் அளிக்கப் போகிறேன் என்று எச்சரித்தேன்” என்றார் மான்வி.

Advertisements