ராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரேசில் அதிபர் பிரதமர் மோடிக்கு கடிதம்

அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும் என்று ராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இமய மலையில் இருந்து இறைவன் ஹனுமன் புனித மருந்தைக் கொண்டுவந்ததைப் போல, இயேசுபிரான் நோயுற்றவர்களை குணப்படுத்தி, பார்டிமூவுக்கு கண் பார்வை அளித்ததைப்போல பிரேசில் மக்களுக்கு உதவுமாறு பிரதமர் மோடியை பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Advertisements

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் வழங்க இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. இதனால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதனை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்து இருந்தது.

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அரசு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குமாறு கடந்த வாரம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் மருந்துகள் ஏற்றுமதியாகாமல் இருந்ததையடுத்து, மருந்துகள் கிடைக்கவில்லையெனில் அதற்கான பதிலடி தரப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியிருந்தார்.

அதன்பிறகு, இந்தியாவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளதால் கொரோனா அதிகம் பாதித்த பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் ப்ரேசில் அரசும், ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தைக் கேட்டிருக்கிறது.

Advertisements

நமது இருப்பைப் பொறுத்து மிகுதியான தேவையில் உள்ள நாடுகளுக்கு பாராசிட்டமாலும், ஹைட்ராக்ஸிகுளோரோகுயினும் அளிக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Related posts