உலகையே திரும்பி பார்க்க வைத்த கேரளா! கொரோனாவை ஜெயித்த பினராயி விஜயன்

கொரோனா வைரஸ் ஒழிப்பில் முன்னோடியாக திகழ்ந்து வரும் கேரளாவை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன. “கம்யூனிஸ்ட் அரசு எப்படி கோரோனோ பரவல் வளைவை தட்டையாக்கியது எப்படி?” (How the communist state flattened its covid-19 curve?) என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி போடுகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8500-ஐ கடந்துள்ளது. தமிழ் நாட்டில் இன்று 106 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. ஆனால் கேரளாவில் இன்று 2 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

Advertisements

இந்தியாவில் முதன்முதலில் கேரள மாணவர்களுக்குத்தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்தனர்.

கொரோனா வைரஸ் மற்ற அண்டைய மாநிலங்களில் பரவியதும் தங்கள் மாநில எல்லையை மூடினார் முதல்வர் பினராயி விஜயன். மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். எனினும் ஆரம்ப கட்டத்தில் அங்கு கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

அதாவது இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தது கேரளா. இதைத் தொடர்ந்து அங்கு செய்யப்பட்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகளால், தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் 2ஆம் இடத்திலிருந்து 9ஆம் இடத்திற்கு கேரளா சென்றுவிட்டது அதிசயமே.

அறிகுறிகள் வைரஸ் பாதித்த பகுதியை மட்டுமல்லாமல் அனைத்து பகுதி மக்களையும் கேரளா அரசு தனிமைப்படுத்தியது. பின்னர் கொரோனா அறிகுறிகள் கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி சளி, காய்ச்சல், இருமல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு அறிகுறிகள் இருந்தாலும் அவர்களை சோதிப்பது என முடிவு செய்து செயல்பட்டது. 30,000 களப்பணியாளர்கள் வீடு வீடாக சோதனை போட்டனர்.

Advertisements

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டவுடனே ரூ 20 ஆயிரம் கோடி நிவாரண உதவிகளை கேரளா அரசு அறிவித்தது. சமூக விலகல் மக்கள் காய்கறிகள் வாங்கக் கூட கூட்டமாக வெளியே செல்லக் கூடாது என்பதற்காக ஸ்விக்கி மூலம் காய்கறிகளை வீடுகளுக்கே கொண்டு வரும் நடவடிக்கையை மாநில அரசு எடுத்தது.

அது போல் பணத்தேவைகளுக்காக மக்கள் ஏடிஎம்களில் கூடுவதை தவிர்க்க, அஞ்சல் துறையுடன் இணைந்து பணத் தேவைப்படுவோருக்கு முன்பதிவிற்கு ஏற்ப அத்துறை ஊழியர்கள் வீட்டுக்கே பணத்தை கொண்டு வந்து கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவது அறவே கட்டுப்படுத்தப்பட்டது.

Kerala, Feb 04 (ANI): Medical staff fully covered with protective suits disposing of waste as they exit from a coronavirus isolated ward at Kochi Medical collage in Kerala on Tuesday. (ANI Photo)

மேலும் கொரோனா கேரளாவில் இரண்டாவது நிலைக்கு வந்த போது கான்டாக்ட் டிரேசிங் முறையை கையிலெடுத்து மேலும் நோய் பரவாமல் தடுத்து பினராயி விஜயன் வெற்றிக் கண்டார்.

இப்படி, தீவிர சோதனைகள் மூலமாக கண்டறிதல், தனிமைப்படுத்துதல், தொடர் சிகிச்சை, ஊரடங்கினை பேணுவதற்கான சமூக உதவிகள் என அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதால், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களும், உலக நாடுகளும் கேரள முதல்வர் பினராயி விஜயனை பாராட்டி வருகின்றன.

Advertisements

Related posts