மக்களவை தேர்தலில் அதிமுகவுக்காக பிரச்சாரம் – நடிகர் கார்த்தி

மக்களவை தேர்தலில் அதிமுகவுக்காக பிரச்சாரம் – நடிகர் கார்த்தி

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவர் சமீபத்தில் மனித உரிமை காக்கும் கட்சியைத் துவங்கி அதற்க்கான கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.

Advertisements

இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை நடிகர் கார்த்தி சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது “முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கொள்கைகளையும் , மக்களுக்குத் தேவையான நல்ல திட்டங்களையும் அதிமுக அரசு நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறது.

தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளது. வரக்கூடிய தேர்தலில் அதிமுகவுக்காக நான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளேன்” என்று நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

Advertisements

Related posts