ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்க முடியும்

ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஆன்லைனில் வீட்டு உபயோகப் பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்க முடியும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் கடந்த 24 நாட்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொழில்துறைக் கடுமையாக முடங்கியுள்ளது. இதில் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும் அடக்கம். இந்நிலையில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 20 முதல் சில நிபந்தனைகளுடன் சில தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது.

Advertisements

இந்நிலையில் இதன் மூலம் ஆன்லைன் ஷாப்பிங்கில் பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் டெலிவரி வேன்கள் இயங்க முறையான அனுமதி பெற்றே இயங்க முடியும் எனக் கூறப்படுகிறது.

Advertisements

Related posts