அந்த இடத்தை தைத்தால் தான் கல்யாணமா?

அந்த இடத்தை தைத்தால் தான் கல்யாணமா

திருமணம் செய்துகொள்ளும் பெண் தனது கன்னித்தன்மையை நிரூபிப்பதற்காக அறுவை சிகிச்சை செய்யப்படும் வழக்கத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

Advertisements

சில குறிப்பிட்ட சமூகத்தில் திருமணம் செய்ய இருக்கும் பெண் கன்னித் தன்மையுடன் இல்லை என தெரிய வந்தால் அங்கு திருமணமே நின்று போய்விடும்… அவ்வாறு பரிசோதிக்கும் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பழக்கமும் தற்போது பரவத் தொடங்கியுள்ளது.

பெண்ணுறுப்புக்குள் காணப்படும் ஒரு மெல்லிய ஜவ்வு கிழிந்து இருந்தால் அந்த பெண் கன்னித்தன்மை இழந்துவிட்டார் என பலரும் அறியாமையால் நம்புவது தான் இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம்.

ஆனால் உண்மையிலேயே அந்தப் பெண் தவறான உறவு வைத்துக் கொண்டால் மட்டும் அந்த ஜவ்வு கிழிந்து போகும் என்று அர்த்தம் இல்லை , சைக்கிள் ஓட்டும்போது பெண்கள், ஓட்டபந்தயங்களில் கலந்து கொள்பவர்களுக்கு தானாகவே அந்த சவ்வு கிழிய வாய்ப்புள்ளது.

இன்றும் சில சமூகத்தில் திருமணத்திற்கு முன்பு பெண்ணின் கன்னித் தன்மையை பரிசோதித்து பார்க்கின்றனர்.. அவ்வாறு பெண்ணுறுப்புக்குள் காணப்படும் மெல்லிய ஜவ்வு கிழிந்து இருந்தால் அதற்கு அறுவை சிகிச்சை செய்து அவர்களின் கன்னித்தன்மையை நிரூபிக்கும் வழக்கம் தற்போது பரவி வருகிறது.

Advertisements

இதனால் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

Advertisements