நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல்நலனை மேம்படுத்த அரசு ‘ஆரோக்கியம்’ திட்டம் அறிமுகம்

இந்தியஅளவில் கொரோனா பலி எண்ணிக்கை 680 ஐக் கடந்துள்ளது. மாநில அரசுகள் பல்வேறு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனாவிற்கு தடுப்பு மருந்துகள் பரிசோதனை அளவில் தற்போது இருந்து வருவதால் மக்களின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதே தடுப்பு வழியாகும்.

Advertisements

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக முதல்வர்,  “மத்திய ஆயுஷ் அமைச்சரவையின் வழிகாட்டுதலோடு ஆரோக்கியம் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கொரோனாத் தொற்றுக்கு சிகிச்சை பெற்ற பின்னும் உடல் நலனைப் பேண வழிகாட்டும் விதமாக ஆரோக்கியம் திட்டம் அமையும்.

மேலும் மக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க கபசுரகுடிநீர் சூரணங்கள் வழங்கப்படும்” எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக அரசு மக்களின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கத்தோடு சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 1 லட்சம் குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisements
Advertisements